தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா கழுத்தில் பாரதியின் மாலை விழுந்த நிலையில் தாமோதரன் நான் சொன்ன மாதிரியே நடந்துச்சு பாத்தியா என சொல்ல பாரதி எப்படிடா என ஆச்சரியத்தோடு இருக்கிறார்.
மறுபக்கம் மாலை எப்படி கழுத்தில் வந்தது என கண்ணம்மா சாந்தி மற்றும் மது யோசித்துக் கொண்டிருக்க சாந்தி ஏதாச்சு ரவுடி பையன் போட்டு இருப்பான் கழட்டி போடு என சொல்ல மது என்ன தான் இருந்தாலும் கோவில்ல வந்து விழுந்த மாலை கழட்டி அப்படியே கையில் எடுத்துட்டு வா என சொல்கிறார்.
பிறகு பாரதியும் தாமோதரனும் கோவில் குளத்தின் அருகே உட்கார்ந்து அடுத்த டெஸ்ட் குறித்து பேசுகின்றனர். மறுபக்கம் கண்ணம்மா வீட்டில் எல்லோரும் இருக்கும்போது அங்கு வரும் சண்முக வாத்தியார் நாளைக்கு சாந்தியை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்ல சந்தோஷப்படுகின்றனர்.
அடுத்து சௌந்தர்யா அந்த குடிசையை பற்ற வைத்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் பாரதி வர நாளைக்கு மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார் வருவதாக சொல்ல எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேண்டாம் என பாரதி கூறுகிறார்.
இதனால் சௌந்தர்யா வருத்தப்பட வெண்பா இதை வைத்து திட்டம் ஒன்றை போட்டு பாரதியிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லி பாரதியை தனியாக அழைத்துச் சென்று இதை டிப்ளமெட்டிக்கா டீல் பண்ணனும். இப்போதைக்கு சரின்னு சொல்லு நாளைக்கு அந்த பொண்ணு கிட்ட தனியா பேசணும்னு சொல்லி எதையாவது காரணம் சொல்லி வேண்டாம் என்று சொல்லிடு. அத்தையும் கொஞ்சம் வரன் பாப்பாங்க அதுக்கு அப்புறம் அவங்களுக்கு அலுத்து போய்விடும் என ஐடியா கொடுக்க பாரதி சரியென சொல்கிறார்.
பிறகு வெண்பா பாரதியை கூட்டி வந்து அவன் சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்ல சௌந்தர்யா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.