தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி சந்தேகத்தின் பேரில் லட்சுமி தனக்குப் பிறந்த மகளே இல்லை என கூறி கண்ணம்மாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பிறந்தநாள் விழாவில் கூட லட்சுமி எனக்கு பிறந்தவர் எனக்கு நான் நான் வருண் புகைப்படத்தை காட்டுவேன் என பாரதி கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் தற்போது பாரதி ஹேமாவுடன் காரில் வரும்போது லட்சுமி குறுக்கே வந்து கீழே விழுந்து விடுகிறார். பிறகு அவரைக் கூட்டிச் சென்று நான் வீட்டில் விடுகிறார் பாரதி. அப்போது கண்ணம்மாவிடம் இப்படியா கேர்ளசா இருப்ப, நானா இருக்கவே லட்சுமிக்கு எதுவும் ஆகலை வேற யாராவது இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என சண்டை போடுகிறார்.
பாரதி இப்படி சண்டை போடுவதைப் பார்த்த கண்ணம்மா இப்பதான் பொறுப்பான அப்பாவா நடந்துக்கறீங்க என கூற லட்சுமிக்கு அப்பாவா தெரிஞ்சா தெரியட்டும் அதுக்கு என்னடி இப்ப என கூறுகிறார். உங்க வாயால இப்படி ஒரு வார்த்தையை கேட்க சந்தோஷமா இருக்கு என கண்ணம்மா கூறுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோக்களை விஜய் டிவி யூ ட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.