சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனகளை சந்தித்து வருகிறது.
இந்த கொரானா வைரஸ் காரணமாக இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளன. பல படங்களின் படப்பிடிப்புகளும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் மீதமுள்ள படப்பிடிப்புகளை முடித்துக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நடிகர்கள் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.