தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ராமன் சாரை வர வைத்து ஜானகி மேடம் உடல்நிலை குறித்து பேசலாம் என பாரதி முடிவெடுக்க அவர் ஜானகிக்கு என்னாச்சு ஏதாச்சு என பதறி அழ பாரதி அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நன்றாக தான் இருக்கிறார்கள் கொஞ்சம் கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு மாத்திரையால் சரி பண்ணி விடலாம் என சொல்லி அனுப்பி விடுகிறார்.
பிறகு என்ன செய்யலாம் என யோசிக்க விக்ரம் அவர்களுடைய மகனிடம் பேச அப்பாவிடம் விஷயத்தை சொல்லாதீங்க அம்மாவிடம் எதுவாக இருந்தாலும் சொல்லுங்க அவங்க பார்த்துப்பாங்க என கூறுகிறார். பிறகு பாரதி சர்வீஸ் ஜானகி மேடம் கிட்டயே பேசலாம் என முடிவெடுக்க அவரை அழைத்து வந்த பிறகு அவரிடம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சொன்ன போது எனக்கு பெரிய பிரச்சனை இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன் சொல்லுங்க எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என கேட்கிறார்.
பிறகு பாரதி அவருடைய உடல்நிலை குறித்து சொல்ல இவ்வளவுதானா விஷயம், அவரிடம் இதை பத்தி எதையும் சொல்லாதீங்க நேரம் வரும்போது நானே எடுத்து சொல்லிக் கொள்கிறேன் என கூறுகிறார். பிறகு கண்ணம்மா அழுது கொண்டு ஜானகி மேடம் செய்ய வேண்டாம் அவங்க கொஞ்ச நாளாவது ராமன் சாரோட சந்தோஷமாக இருக்கட்டும் என சொல்ல பாரதி ஒரு டாக்டரா நான் ஆபரேஷன் செய்வதுதான் சரியான சொல்லுவேன் அதன் மூலம் 10% அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்.
இந்த பக்கம் வெண்பா பியூட்டி பார்லருக்கு போக வேண்டும், கார் ரிப்பேர் என்பதால் ரோஹித்தின் காரை எடுத்துக் கொண்டு செல்கிறார். வழியில் யாரோ ஒருவர் காரில் பார்த்து இது எங்களுடைய கார் என சண்டையிடுகின்றனர். சாந்தி ரோஹித்திடம் இன்பார்ம் எடுத்துக் கொண்டு சென்றிருப்பதாக சொன்னதும் அவர் பதறி போய் ஆட்டோ பிடித்து வெண்பாவை தேடி செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.