தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பேப்பரில் கண்ணம்மா பற்றிய செய்தி வந்திருக்க அதை படித்து ரோஹித் வெண்பாவை வெறுப்பேத்த கடுப்பான வெண்பா இனி கண்ணம்மா இருக்கவே கூடாது என அவளை கொல்ல திட்டமிடுகிறார்.
இந்த நேரத்தில் ஒரு லாரியை ஏற்பாடு செய்து கண்ணம்மா வரும்போது அவரை ஏத்தி கொல்ல திட்டம் போட்டு அதற்கு தயாராக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஹேமா தன்னுடைய பாட்டியுடன் காரில் வந்து கொண்டிருக்கும் போது அம்மா பற்றி பேச சௌந்தர்யா பாரதி அம்மாவைப் பற்றி பேசக்கூடாது என சொல்லி இருக்கிறான்ல என கூறுகிறார். இதனால் ஹேமா கோபித்துக் கொள்ள அவருக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்க முடிவு செய்து காரை ஒரு இடத்தில் நிறுத்துகிறார் சௌந்தர்யா.
இந்த நேரத்தில் கண்ணம்மா நடந்து வர அவர் மீது வெண்பா லாரியை திட்டமிட லாரி கண்ணம்மாவின் பின்னாடி வருவதை பார்த்த ஹேமா சமையல் அம்மா சமையல் அம்மா என கத்துகிறார். ஆனால் போனில் பேசிக்கொண்டே இருந்ததால் அது கண்ணம்மா காதில் விழவில்லை பிறகு சௌந்தர்யா வர அவரிடம் ஹேமா இந்த விஷயத்தைச் சொல்ல அவர் கண்ணம்மா கண்ணம்மா என கத்துகிறார். சமையல் அம்மா பேரு கண்ணம்மாவா என ஹேமாவுக்கு தெரிய வருகிறது.
லாரி மோத வந்த நேரத்தில் ஓடி வந்து கண்ணம்மாவை இழுத்து காப்பாற்றுகிறார். பிளான் தோல்வியானதால் கடுப்பான வெண்பா அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு எல்லோரும் கண்ணம்மாவில் இருந்து உனக்கு என்ன ஆச்சு என கேட்கின்றனர். ஹேமா கண்ணம்மாவின் பெயரை தெரிந்ததும் அதிர்ச்சியோடு அவரை அப்படியே பார்க்கிறார். பிறகு கண்ணம்மாவை கேட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
