Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையால் தொடரும் விமர்சனம்.. பாவனா கொடுத்த விளக்கம்

bhavana-explanation-post-viral

ஒரு காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பாவனா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக திகழ்ந்திருந்தவர். ஒரு சில காரணத்தால் சுமார் ஐந்து வருடங்களாக திரைத் துறையில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை பாவனா தற்போது மீண்டும் மலையாளத்தில் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ன்னு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் நடிகை பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் `கோல்டன் விசா’ வழங்கப்பட்டது. இந்த விழாவில், நடிகை பாவனா அணிந்திருந்த உடை குறித்து சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது. இதனால் மனம் வருத்தம் அடைந்த பாவனா தன் மீது எழுந்துள்ள இந்த சைபர் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், ‘எனக்கானவர்கள் யாரும் காயமடையாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பவும் நான் முயற்சித்து கொண்டிருக்கும்போது, இப்படியான சிலர் அவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிக்கின்றனர். நான் என்ன செய்தாலும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சிப்பதன் மூலம் என்னை இவர்கள் இருளுக்குள் தள்ளுவதை உணர்கையில் மிகவும் வேதனை அளிக்கிறது.

இதுபோன்ற செயல்கள் மூலம்தான் அவர்கள் மகிழ்ச்சி காண விரும்புகின்றனர் என்றால், நான் அவர்களைத் தடுக்கவில்லை” என்று அப்பதிவில் பதிவிட்டிருக்கிறார். மேலும் பாவனா ஆடைக்கு உள்ளே அவர் எந்த உடையும் அணியவில்லை என்று பலரும் அவரை கமெண்ட் செய்து அவரை மோசமாக விமர்சித்துள்ளனர். அவற்றுக்கு விளக்கமளித்துள்ள பாவனா, `நான் என் சருமத்தின் நிறத்தில் ஆடை அணிந்திருந்தேன். மற்றபடி இவர்கள் குறிப்பிடுவது போல நான் ஆடை அணியவில்லை. அப்படி அணியும் நபரும் நானில்லை. இந்த வகை உடைகளை பயன்படுத்தியோருக்கு இதுகுறித்து தெரிந்திருக்கும்’ என குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பாவனா அளித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.