நடிகை பாவனாவை கடைசியாக கன்னடத்தில் வெளியான 96 படத்தின் ரீமேக் படத்தில் நாம் பார்த்திருப்போம். தமிழில் திரிஷா போல கன்னடத்தில் பாவனா நடித்திருந்தார்.
மலையாளத்தில் கடைசியாக அவர் விளக்குமாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். மலையாள நடிகையான பாவனா கடந்த 2018 ல் தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் காதலிக்க தொடங்கி 9 வருடங்கள் தற்போது ஆகிவிட்டதாம். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக ரொமான்ஸாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.