தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள ‘உப்பென்னா’ என்கிற தெலுங்கு படம் வருகிற பிப்.12-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிரஞ்சீவி, விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது: “விஜய் சேதுபதி சிறந்த மனிதர். என்னோட நண்பன். கதாபாத்திரங்களின் வலிமையையும், தன்மையும் உணர்ந்து நடிப்பவர்.
ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அவர் என்றைக்குமே பிடிவாதம் பிடித்ததில்லை. அண்மையில் மாஸ்டர் படம் பார்த்தேன். அதில் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது” என கூறினார்.