தளபதி விஜய் நடித்து வெளியான பத்ரி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. தமிழ் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வந்தார்.
பத்ரி படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படம் மிக பெரிய வெற்றியை நடிகை பூமிகாவிற்கு தேடி தந்தது.
2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தனது திரையுலக பயணத்தை தொடந்துகொண்டே இருக்கிறார் நடிகை பூமிகா.
இந்நிலையில் 42 வயதாகும் நடிகை பூமிகா இளம் நடிகைகளுக்கு நிகரான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க..