Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலம் ஆரவ்விற்கு குழந்தை பிறந்தது- வெளிவந்த சூப்பர் செய்தி

Big Boss Aarav Blessed With A Baby Boy

சில வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களுக்கு மிகவும் புதிய நிகழ்ச்சியாக இருந்தது.

விஜய்யில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பெரிய எதிர்ப்பு, சர்ச்சை எல்லாம் நிறைய வந்தன, அதையெல்லாம் சமாளித்து தொலைக்காட்சி முதல் சீசனை மிகவும் வெற்றிகரமாக முடித்தார்கள்.

இப்போது 5வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களால் அங்கீகரிக்கப்படாத பலர் பிரபலம் ஆனார்கள்.

இந்த பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் ஆரவ். வீட்டில் மிகவும் தெளிவாக விளையாடிய இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.

நிறைய படங்கள் நடித்துவரும் இவர் ராஹே என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார், அவரது திருமணத்திற்கு பிக்பாஸ் முதல் சீசன் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

தற்போது ஆரவ் குறித்து என்ன சந்தோஷமான விஷயம் என்றால் அவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.

குழந்தை தாய் இருவருமே நலமுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.