தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் உருவாக்கி வரும் இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அவர்களின் ஒருவர் தான் பிக் பாஸ் பிரபலமான ஜனனி.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றின் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் தளபதி விஜய் அப்பா, மகன் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அப்பாவாக நடிக்கும் விஜய்யின் மகளாக தான் ஜனனி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இந்த தகவல் பரவி வருகிறது.
