Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தன்னை தானே கடல் கன்னி என அழைத்து கொண்ட பிக்பாஸ் ரைசா..! வித்தியாசமான போஸில் அவர் வெளியிட்ட புகைப்படம்

Big Boss Raiza who called herself a mermaid!

பிக்பாஸ் சீசன் 1 மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரைசா வில்சன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே VIP 2, வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மேலும் தற்போது The Chase, F.I.R உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் The Chase திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வித்தியாசமான உடையில் அவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது கடலில் படுத்தப்படி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு ” கடல் கன்னி பீல்ஸ்” என கேப்ஷன்போட்டுள்ளார்.