தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் மிட் வீக் எவிக்சன் என்ற பெயரில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து மற்ற போட்டியாளர்களுக்கு மக்கள் ஓட்டளிக்கும் வகையில் ஓட்டிங் ஓபன் ஆகவே இருந்தது.
இதனால் வார இறுதியில் இன்னொரு எவிக்ஷன் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அது உண்மையானால் மீதமுள்ள போட்டியாளர்களின் நிக்சன் தான் மிக குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ளார். ஆகையால் நிக்சன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
