விஜய் தொலைக்காட்சியில் நடித்து வரும் பிரபலம் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர்தான் ராஜு. இவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார். இந்நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா உடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.
கடந்த வாரம் இந்நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நடைபெற்றது. அப்பொழுது இந்நிகழ்ச்சியில் “பிரம்மாஸ்திர” படத்தின் பிரமோஷன்காக நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்பொழுது இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த ராஜு சென்னை வட்டாரத்தின் மொழியை கற்று தருவதாக ரன்பீர்கபூருக்கு சில வார்த்தைகளை சொல்லி தந்திருக்கிறார். அந்த வார்த்தைகள் சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் மன வருத்தம் அடைந்த ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறிவிட்டது எனக்கூறி பகிரங்கமாக மன்னிப்பு கூறியுள்ளார். அந்தப் பதிவு தற்பொழுது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
திரு.ரன்பீர் கபூர் அவர்களுக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக்குடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என விமர்சணம் எழுவதை படித்தேன். நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்க்காக வருந்துகிறேன்… இரிடேட் ஆகவேண்டாம், மன்னிக்கவும்🙏🏻#Madras
— Raju Jeyamohan (@rajuactor91) September 8, 2022