தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ளது.
கொரானா வைரஸ் பரவலால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்குவது தள்ளிப்போய் வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்காக வெண்ணிற தாடியுடன் இருந்த கமல்ஹாசன் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.
இதனையடுத்து தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனுக்கான ப்ரோமோ வீடியோ தயாராகி விட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் முதல் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இரண்டாவது ப்ரோமோ வீடியோவை செப்டம்பர் மாதத்தில் வெளியிட நிகழ்ச்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர்கள் அதனை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்க