நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே மக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளிலும் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது.100 நாட்கள் பிரபலங்கள் அனைவரும் ஒரே வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு தொலைபேசி போன்ற எந்தவித தொடர்பும் இல்லாமல் அவர்களுக்குள் நடக்கும் சண்டை சச்சரவு பாசப்போராட்டம் போன்ற பல்வேறு உணர்வுகளை கேமரா மூலம் படம் பிடித்து அதனை மக்களுக்கு ஒளிபரப்பும் நிகழ்ச்சியாகும்
பிக் பாஸ் தமிழில் இதுவரை நடந்த மூன்று சீசன்களுமே கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியுள்ளார்.
ஆனால் பிக்பாஸ் தெலுங்கில் முதல் சீசனை பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்கினார். அதன்பின் நடந்த அடுத்த சீசனை தெலுங்கு பிரபலம் நாகார்ஜுன் தொகுத்து வழங்கினார்.
தற்பொழுது பிக் பாஸ் சீசன் 4 தெலுங்கில் தொடங்க இருப்பதாகவும் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்ற காட்சி இல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நாகர்ஜுன் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் கரோனா வைரஸ் தாக்கத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடல் முழுவதையும் பாதுகாப்பு டிரஸ் அணிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தமிழிலும் பிக் பாஸ் சீசன்4 எப்போ வரப்போகிறது என்று ஆவலை ஏற்படுத்தி விட்டது.