Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அப்பாவும் சரியில்ல, அம்மாவும் சரியில்ல.. பாலாஜி முருகதாஸின் கண்ணீர் பக்கம் – ரசிகர்களை கலங்க வைத்த வீடியோ.!!

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

போட்டியாளர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையில் குறித்து பேசுமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படி பாலாஜி முருகதாஸ் பேசும் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. என்ன எங்க அப்பா அம்மா ஸ்கூல்ல சேர்த்ததோடு சரி ஒரு முறை கூட பேரன்ஸ் மீட்டிங்கு அவங்க வந்ததே இல்லை என கூறியுள்ளார்.

மேலும் நான் தூங்கிட்டு இருப்ப திடீர்னு தலை வலிக்கும். என்னடா என் எழுந்து பார்த்தா அப்பா என்ன அடிச்சு இருப்பாரு. அப்பா ஆல்ககால் சாப்பிடுவாரு அவரோடு சேர்ந்து அம்மாவும் சாப்பிடுவாங்க.

குழந்தையை வளர்க்க முடியாதவங்க எதுக்கு பெத்துக்கணும் என தன்னுடைய சோகத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது.