Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு தேதி என்ன?? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – புதிய ப்ரோமோ வீடியோ உடன் இதோ

பிக் பாஸ் சீசன் 4ன் ஒளிபரப்பு தேதி என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சீசன்களை நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி விரைவில் நான்காவது சீசனை தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கு பெறுவார்கள் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கும் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ வீடியோ மூலமாக இதனை உறுதி செய்துள்ளது. வரும் அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ஆறு மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ