தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்தாவது சீசன் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
வனிதா விஜயகுமார், சுஜா வருணி, அபிநய், தாடி பாலாஜி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் இந்த வார நாமினேஷனில் பாலா, ஜூலி, சினேகன் மற்றும் சுருதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் சினேகன் குறைந்த ஓட்டுகளை பெற்று உள்ளார். இதனால் அவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.