விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
முதல் வாரத்தில் சாந்தி தனலட்சுமி ஆயிஷா உட்பட மொத்தம் பத்து போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தனலட்சுமி வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அசல் கோளாறை எதிர்த்து அவர் பேசியதால் வாக்குகள் குவிய தொடங்கியுள்ளது.
இப்படியான நிலையில் தற்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி ஷிவின் கணேசன், வி ஜே மகேஸ்வரி மற்றும் சாந்தி உள்ளிட்டோர் மட்டுமே குறைந்த ஓட்டுக்களுடன் டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக சாந்தி தான் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. இதனால் இந்த வாரம் அவரே வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

bigg-boss-6-first-week-voting details