தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்ததுடன் பிக் பாஸ் அல்டிமேட் என 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியும் முடிவடைந்தது. இவற்றைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளது. இதையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
இதற்கான வேலைகளில் விஜய் டிவி பரபரப்பாக பணியாற்றி வருகிறது. போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் அலசல் புரசலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படியான நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த புகைப்படங்களை பார்க்கும் போது இதுவரை இல்லாத அளவிற்கு பிக் பாஸ் வீடு மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக இருக்கிறது. இதோ பாருங்க
View this post on Instagram