Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷிவினை வெறுப்பேத்த தான் அப்படி செய்தோம். குயின்ஷி ஓபன் டாக்

bigg-boss 6 queency-about-kathir

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கி வரும் நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் குயின்ஷி.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வரை பலரும் இவரை ட்ரோல் செய்து கலாய்த்து வந்தனர். மேலும் சக போட்டியாளரான ஷிவின் தனக்கு கதிர் மீது கிரஷ் இருப்பதாக கூறியதும் கதிர் மற்றும் குயின்ஷி என இருவரும் அதிகம் நெருக்கம் காட்டி வந்தனர். இதனால் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவத் தொடங்கின.

இப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த குயின்ஷி கதிர் மீது காதல் எல்லாம் இல்லை, ஷிவினை வெறுப்பேத்த தான் நாங்கள் இருவரும் அப்படி செய்தோம் என தெரிவித்துள்ளார். குயின்ஷி அளித்த இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

bigg-boss 6 queency-about-kathir
bigg-boss 6 queency-about-kathir