Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 6 குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

Bigg Boss 6 Tamil Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ராஜூ ஜெயமோகன் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 1 முதல் 5 வரை கலந்து கொண்ட பல்வேறு பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார்? தொகுத்து வழங்கப் போவது கமலா சிம்புவா என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Bigg Boss 6 Tamil Update
Bigg Boss 6 Tamil Update