Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரதீப் ,விஷ்ணு இடையே ஏற்பட்ட வாக்குவாதம். ப்ரோமோ வீடியோ வைரல்

bigg-boss-7-day-8-promo-1 video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

எட்டாவது நாளான இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் சரவணன் விக்ரம் ஏய் என்று கூப்பிட விஷ்ணு என சொல்ற பேரை சொல்லி கூப்பிடு என கோபப்படுகிறார்.

குரூப்பா எல்லோரும் கூடியிருக்க இங்கு நீ கேப்டனா இல்லை இருக்கிற 11 பேரும் கேப்டனா அப்படின்னா உனக்கு ஆளுமை இல்லை என்று அர்த்தம் என்று சொல்ல அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என பிரதீப் சரவண விக்ரமுக்கு ஆதரவாக பேச விஷ்ணு சினிமா பேசும்போது டீமா பேசணும் என பதிலடி கொடுக்கிறார்.

உடனே பிரதீப் டீம் கிடையாது என்று சொல்ல அப்படின்னா போடா என்று விஷ்ணு கூறுகிறார். அதை நீ சொல்லக்கூடாது கேப்டன் சொல்லணும் என பிரதீப் பதிலடி கொடுக்கிறார்.