தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில் பிக் பாஸ் சீசன் 7 லோகோ தயாராகி விட்டதாக போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.
ஆனால் இது தமிழுக்கான லோகோ இல்லை தெலுகு பிக் பாஸ் சீசன் 7 லோகோ. தமிழைப் போல தெலுங்குவிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அங்கும் விரைவில் 7-வது சீசன் தொடங்க உள்ளது.
அதற்கான லோகோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram