தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை அனன்யா, பாவா செல்லதுரை, வினுஷா தேவி, யுகேந்திரன், வினுஷா, பிரதீப், அன்னபாரதி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ஐஷூ, விசித்ரா, அர்ச்சனா, வி.ஜே பிராவோ, பூர்ணிமா, தினேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் தற்போது வரை பூர்ணிமா மற்றும் ஐசு ஆகிய குறைவான ஓட்டுகளை பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் ஒருவரே அல்லது இருவருமே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.