தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நாளையுடன் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.
இந்த சீசன் 7 இறுதிப் போட்டி களத்தில் அர்ச்சனா, மாயா, தினேஷ், மணி மற்றும் விஷ்ணு என 5 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மிட் வீக் எலிமினேஷனில் விஷ்ணு வெளியேற்றப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
மீதமுள்ள நான்கு போட்டியாளர்களின் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று அர்ச்சனா முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரைத் தொடர்ந்து மணிக்கு இரண்டாவது இடமும் தினேஷ்க்கு மூன்றாவது இடமும் கிடைக்க மாயா தான் கடைசி இடத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இருந்த போதிலும் மாயாவுக்கு டைட்டில் கொடுக்கவே 80% வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. நடக்கப் போவது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளர் யாராக இருக்க வேண்டும் என்று உங்களது கருத்துக்களை கமெண்ட்டில் சொல்லுங்க.
