தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
நேற்று பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் கலகலப்பாக நடந்தது. தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில், ஸ்கூல்ல நடந்த விஷயத்தை ஃபீட்பேக் சொல்லுகின்றனர். அதில் பெரும்பாலானோர் வர்ஷினியை மட்டும் குறை சொல்லுகின்றனர். இதனால் வர்ஷினியின் முகம் மாறுகிறது.
அடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜாக்குலின் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்க சத்யா இது நாமினேஷன் ரிவ்யூ மாதிரி இருக்கு, என்று சொல்ல நான் எடுப்பது தான் நீங்க கவனிக்கணும் என்று சொல்லுகிறார் ஜாக்லின். அது வேணாம் என்று சொல்ல உங்களுக்கு வேணாம்னா நீங்க எழுந்து வெளியே போயிடுங்க என்று சொல்ல சத்யாவும் எழுந்து வெளியே சென்று விடுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram