Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸில் நடந்த முதல் நாமினேஷன், பேரதிர்ச்சியில் போட்டியாளர்கள்..! வெளியான முதல் ப்ரோமோ

bigg boss 8 tamil promo 1 update

முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. 18 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி விஜய் சேதுபதி உள்ளே அனுப்பி வைத்துள்ளார்.

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் போட்டியாளர்கள் என அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது. அதில், அதாவது பிக் பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் நடக்கவுள்ளது. போட்டியாளர்கள் குழப்பத்தில் இருக்க ஜாக்குலின் 24 மணி நேரத்தில் எப்படி இவங்க இருக்கணுமா இருக்கக் கூடாதா என்று முடிவெடுக்க முடியும் என்று பேசுகிறார்.

பிறகு நாமினேஷன் தொடங்க போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து நாமினேட் செய்கின்றனர். இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.