தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் படு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
யாரும் எதிர்பாராத விதமாக ஐந்து பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து உள்ள நிலையில் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தற்போது வரை பயங்கர எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் மாயா பூர்ணிமா டீம் அடுத்ததாக அர்ச்சனாவை டார்கெட் செய்ய தொடங்கியுள்ளது.
ஆனால் அவர்களுக்கு அசராமல் அர்ச்சனா தக்க பதிலடி கொடுத்து தாறுமாறான ஆட்டத்தை ஆடி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளரான ஆரி அர்ஜுனன் தன்னுடைய ஆதரவை அர்ச்சனாவுக்கு தெரிவித்து பதிவு செய்துள்ளார்.
இது குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Archana you begin the game stay strong 💪 #BigBoss7tamil #VJArchana
— Aari Arujunan (@Aariarujunan) November 7, 2023