தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா பசபட்டி. அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார்.
இதனையடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் மற்ற சேனல்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் இவருடைய கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது என கூறலாம்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது ரேஷ்மா வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி?? கோபி பார்த்தா உங்கள திட்ட மாட்டாரா என கிண்டலடித்து வருகின்றனர்.
இதோ பாருங்க
View this post on Instagram