Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கில்லி தனலட்சுமி கேரக்டரை ரீ கிரியேட் செய்த அனிதா சம்பத்,வைரலாகும் வீடியோ

bigg boss anitha-sampath-as-ghilli-dhanalakshmi

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நம்பர் ஒன் வசூல் மன்னனாக வலம் வரும் இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்குப் பிறகு ஒரே ஒரு படத்தில் நடிக்க உள்ள தளபதி விஜய் அடுத்ததாக முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். 20 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இப்படியான நிலையில் செய்தி வாசிப்பாளரும் பிக் பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லி தனலட்சுமி கேரக்டரை ரீ கிரியேட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க