Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“என் காதல் வாழ்க்கை ரொம்ப கேவலமாக போயிட்டு இருக்கு”: பிக் பாஸ் தர்ஷன் பேச்சு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஜஸ்ட் மிஸ்ஸில் டைட்டிலை தவற விட்டவர் தர்ஷன்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சனம் செட்டி எனக்கும் தர்ஷனுக்கும் நிச்சயம் ஆகிவிட்டது என புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் தர்ஷன் என்னை கழட்டி விட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் தர்ஷன் நாடு என்ற படத்தில் நடிக்கும் நிலையில் அப்படத்திற்காக அளித்த பேட்டி ஒன்றில் காதல் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்ப அதற்கு ஓப்பனாக பதில் அளித்துள்ளார். எனக்கு ஒரு பெண்ணின் மேல் பிரஷ் இருக்கிறது ஆனால் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவரின் மீது கிரஷ் இருக்கலாம். என் காதல் வாழ்க்கை ரொம்ப கேவலமா போயிட்டு இருக்கு. படங்கள் வருவதால் அதன் மீது கவனம் செலுத்தி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Bigg Boss dharshan about love
Bigg Boss dharshan about love