Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் ஆரி அர்ஜுனன் சொன்ன குட் நியூஸ். குவியும் வாழ்த்து

bigg-boss-fame-aari-arjunan latset update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 6 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஏலாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் ஆரி அர்ஜுனன். இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் இடையில் தற்போது லிட்டில் பிரின்ஸ்க்கு அப்பாவாகி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பிக் பாஸ் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் வாழ்த்துக்கள் என வாழ்த்துக்களை சொல்ல இது பாலாஜி முருகதாஸ் என பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.