காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஜாக்லின்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஜாக்குலின். ஆரம்பம் முதலே ஸ்ட்ராங் கண்டஸ்டண்டாக விளையாடி வந்தார்.இவர்தான் டைட்டில் வெல்வார் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக பணப்பெட்டி டாஸ்க்கில் கொடுத்த நேரத்திற்குள் வர முடியாததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இது அவர் ரசிகர்கள் பலரையும் அப்செட் ஆக்கியது என்றே சொல்லலாம். இந்நிலையில் அவர் காதலர் தினமான இன்று காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
