ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி. இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பிக் பாசிற்கு பிறகு இவர் தற்போது அம்மன் தாயி, நீட் தேர்வாள் உயிர் இழந்த அனிதாவின் வழக்கை வரலாறு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஜூலி. இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் மிகவும் அழகாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் அடேங்கப்பா இது பிக் பாஸ் ஜூலியா என்று தான் கேட்டு வருகிறார்கள். மேலும் இந்த அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.
Life is an adventure just enjoy it 🌹💓 pic.twitter.com/z3kRoluv1x
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) August 2, 2020