தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராக பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கவின். நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமான கவின் அந்த படத்துக்குப் பிறகு லிப்ட் என்ற படத்தில் நடித்தார்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் டாடா. திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டாடா படத்தைப் பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன் பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இப்படியான நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கவின் நடிப்பில் ஒரு படத்தை உருவாக்க கமல் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கேள்விப்பட்டு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
