Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் “ஸ்டார்” படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா? படக்குழு அறிவிப்பு

bigg boss kavin-movie-update

“இயக்குனர் எலன் இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தில் லால், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஏ ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. “,