Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரதீப் குறித்து கேட்ட கேள்விக்கு பூர்ணிமா கொடுத்த பதில். வைரலாகும் தகவல்

bigg boss poornima-open-talk-about-pradeep

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றோடு நூறாவது நாளை நெருங்கி விட்ட நிலையில் இந்த வாரத்துடன் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூர்ணிமா 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவரைப் பற்றி பிரதீப் பூர்ணிமாவின் அம்மாவிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்காக அமைதியாக இருப்பதாக பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் பூர்ணிமா கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு நாட்களாக பிரதீப் பற்றிய கேள்விதான் சமூக வலைதளங்களில் அதிகம் எழுந்து வருகிறது அதை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பூர்ணிமா பதில் அளித்தது என்னவென்றால் நான் இந்த விஷயத்தை பற்றி பேச விரும்பல. நான் எதற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு நாளைக்கு எல்லோருக்கும் என்னை பற்றி புரியும் அப்போது எல்லாம் தெரியும் என கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ இப்பவும் பிரதீப் மேல தான் தப்பு என சொல்றீங்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

bigg boss poornima-open-talk-about-pradeep
bigg boss poornima-open-talk-about-pradeep