தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து பிரபலமானவர் சரவண விக்ரம். இந்த சீரியலை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிக்சர் போட்டியாளர் என பெயர் எடுத்தார்.
தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வந்த சரவண விக்ரமை டைட்டில் வின்னர் என்று கூட கலாய்த்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியால் அதிக எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தொழிலை விட்டு விளக்குவதாக பதிவு செய்து அதனை டெலிட் செய்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக இதை வைத்தும் பலரும் விக்ரமை கலாய்த்து வருகின்றனர்.
