தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மாஸ்டர் சாண்டி. இவருடன் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரவணன் அவர்களும் கலந்துகொண்டார்.
1980 மற்றும் 90களில் முன்னணி நடிகராக பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். அதன்பிறகு இவர் பருத்தி வீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்திருப்பார்.
இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்தது பலரும் இவரை சித்தப்பு சரவணன் எனவே அழைக்க தொடங்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கவின், சாண்டி, முகேன் மற்றும் தர்ஷன் ஆகியோர் இவரை சித்தப்பா என்றே அழைத்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த சரவணன் திடீரென சில சூழ்ச்சிகளால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
தற்போது சரவணன் செம ஸ்டைலிஸ் லுக்கில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை மாஸ்டர் சாண்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சரவணனா இது? என வாயடைத்து வருகின்றனர்.