நாடு முழுவதும் கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் கடந்த 5 மாதங்களாக வே சினிமா உட்பட பல்வேறு தொழில்களும் முடங்கிய நிலையில் உள்ளது.
ஆனால் பல்வேறு மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு மட்டும் கட்டுப்பாடுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ள நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது.
இந்த புரோமோ ட்விட்டரில் இந்த வித முன்னறிவிப்பும் இன்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் அளவிற்கு திடீரென்று வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4க்கான டீசர் கடந்த வாரம் வெளியானது.இந்த சீசனையும் பாலிவுட் டான் ஆன சல்மான் கானே தொகுத்து வழங்கவுள்ளார்.
ஆனால் பாலிவுட்டில் சுஷாந்த்மரணம் அதைத்தொடர்ந்து சின்னத்திரை நடிகர்களின் திடீர் மரணம் என பல்வேறு சலசலப்புகள் மத்தியில் இந்நிகழ்ச்சி தொடங்குவது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால்,குறிப்பாக சுஷாந்த் மரணத்திற்கு சல்மான் கானும் ஒரு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதேபோன்று தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில் கிரே ஹேரில் கண்ணில் கண்ணாடி, கழுத்தில் ஸ்கார்ப், கையில் பைனாகுலர் என எதையோ பார்த்து சிரிக்கிறார் நாகார்ஜூனா. இதெல்லாம் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது
ஹிந்தியில் ஒருபக்கம் பிக்பாஸ் பணிகள் தொடங்கிய நிலையில் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தமிழிலும் கூடிய சீக்கிரத்தில் பிக்பாஸ் 4க்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next em jarugutundo chudataniki stay tuned!!!#BiggBossTelugu4 coming soon on @StarMaa pic.twitter.com/hdkyJe6FuL
— starmaa (@StarMaa) August 12, 2020