தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆர்.ஜே ப்ராவோ மற்றும் அக்ஷயா என இருவர் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் எட்டு பேர் இடம் பிடித்துள்ளனர்.
இவர்களில் விசித்ரா அதிகமான ஓட்டுக்கள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று ஜோவிகா தொடர்ந்து கடைசி இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் மிக்சர் போட்டியாளராக இருந்து வரும் சரவண விக்ரம் இடம் பிடித்துள்ளார்.
இதனால் தற்போது வரை மூன்று சதவீதம் வெளியேறப் போவது ஜோவிகா தான் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் வழக்கம் போல கண்டென்ட் கொடுக்கும் ஜோவிகாவை சேவ் செய்து விக்ரமை வெளியேற்றுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
