தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று வைல்ட் காட் போட்டியாளர்கள் மீண்டும் நுழைய இருப்பதாகவும் மூன்று கடினமான டாஸ்க் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த டாஸ்க்கில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் இந்த வீட்டில் தொடர்ந்து இருப்பார்கள். பழைய போட்டியாளர்கள் அவர்களுக்கு வழி விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் 14 போட்டிகள் கலக்கத்தில் இருக்கும் நிலையில் அந்த மூன்று போட்டியாளர்கள் அனன்யா, விஜய் வர்மா, மற்றும் வினுஷா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வினுஷா மட்டும் உள்ள வந்தால் நிச்சயம் நிக்சன் நிலைமை அவ்வளவு தான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இப்படி ஒரு தருணத்திற்காகவே காத்திருப்பதாகவும் கூறி வருகின்றனர்.