Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த மாயா. கோபத்தில் ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள். வைரலாகும் ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோவில் மாயா பிரஷ்சை எடுத்து வைத்துக்கொண்டு என்னைக் கேட்காமல் யாரும் இதை எடுக்கக் கூடாது என்று சொல்ல தினேஷ் வாக்குவாதம் செய்ய கை இருக்குல்ல கையில பல் துலக்குங்க என கூறுகிறார்.

இதை தொடர்ந்து அர்ச்சனா மோசமான தலைவி என்று சொல்ல ஆமாம் என மாயா வாக்குவாதம் செய்கிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனை உருவாக உள்ளது.