Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விசித்ராவுடன் வாக்குவாதம் செய்த மாயா பூர்ணிமா, பதிலடி கொடுத்த அர்ச்சனா. வைரலாகும் ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் கடந்த வார சனிக்கிழமை எபிசோடில் பெண் போட்டியாளர்களின் குற்றச்சாட்டால் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் பிரதீப் வெளியேற்றம் குறித்து விசித்திர நீங்க பிளான் பண்ணி அவனை வெளியே அனுப்பிட்டிங்க அவ்வளவுதான் என சொல்ல பிக் பாஸ் இந்த ரெட் கார்ட் நான் எலிமினேஷன் ஒரு குரூப் ஆக்டிவிட்டியாக தெரியலாம் என்று கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து பூர்ணிமா மாயா ஆகியோர் விசித்ராவுடன் வாக்குவாதம் செய்ய அர்ச்சனா நீங்க உங்க மனசாட்சியோட அவர வெளிய அனுப்பி இருந்தா ஒரு பிரச்சனையும் கிடையாது ஆனால் அப்படி இல்லை என்றால் ஒருத்தரோட லைஃபை அழிச்சிட்டீங்க அவ்வளவுதான் என பதிலடி கொடுக்கிறார்.

இதோ அந்த வீடியோ