தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில் கடந்த வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பரபரப்பான திருப்பங்களுடன் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் இன்றைய ப்ரோமோவில் முத்துக்குமரன், வி.ஜே விஷால் மற்றும் ஆனந்தி என மூவரும் உங்களைவிட நான் பெஸ்ட் என்று வாக்குவாதம் செய்கின்றனர்.
உங்க ரெண்டு பேர விட நான் பெஸ்ட் நான் நினைக்கிறேன் என்று முத்துக்குமரன் வாக்குவாதம் செய்கிறார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram