தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ஷெரின். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் திரையுலகை விட்டு வெளியேறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து உடல் எடையை குறைத்து விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தனது முடியை கலரிங் செய்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
ரசிகர்கள் இந்த கெட்டப் குறித்து பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு விதமான கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
View this post on Instagram