தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஷெரின்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விசில் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் காலப்போக்கில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து கடந்த வருடம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் டோரா புஜ்ஜி அக்காவைப் போல இருப்பதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.