தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் சில காரணங்களால் இதிலிருந்து விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
சிம்பு வழங்கத் தொடங்கியதும் முதல் ஆளாக தாடி பாலாஜி வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து சினேகன் வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சினேகன் வனிதா விஜயகுமார், தாடி பாலாஜி உள்ளிட்டோரை தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து நேரில் சந்தித்து உள்ளார்.
உண்மையான நட்பு என இந்த புகைப்படங்களை வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram